டயனாவுக்கு எதிராக மற்றுமொரு சட்ட நடவடிக்கை

டயனா கமகேவுக்கு இரட்டை குடியுரிமைக்கூட இல்லை, அவர் வெளிநாட்டு பெண், சட்டவிரோதமாகவே எம்.பி. பதவியை பெற்றுள்ளார். எனவே, அவருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ டயனா கமகேவுக்கு இரட்டைக்குடியுரிமைக்கூட இல்லை, அவர் வெளிநாட்டு பெண் என்றே எமக்கு தெரியவருகின்றது. இதுவரைகாலமும் அவர் எம்.பி. பதவியை சட்டவிரோதமாகவே வகித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்டத்தை அவர் ஆதரித்தார், கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்தார். அவரின் வாக்கு இல்லாமல் இருந்திருந்தால் பிரேரணை வென்றிருக்கும்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுள்ள டயனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பில் சட்டதரணிகளுடன் கட்சி கலந்துரையாடிவருகின்றது.” – என்றார்.

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …