தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் பெட்டியில் சோதனை
சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் ஆட்கள் இருப்பது போன்று சத்தம் கேட்பதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்ததால் ரயில்வே போலீசார் தாம்பரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
சரக்கு பெட்டியின் சாவி இல்லாததால் கதவை உடைத்து ஆட்கள் பதுங்கி இருக்கிறார்களா என சோதித்தனர். சரக்குப்பெட்டியில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்தபின் ரயில் புறப்பட்டுச் சென்றது.
பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து