பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் தேகம் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட 30,000க்கும் மேற்பட்டோர் ரோம் நகரில் உள்ள சாண்டா மரியா மெஜியோர் தேவாலயத்திற்கு வருகைதரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அவர் தேகம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் புகைப்படம் நேற்று (27) ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.
அவரது தேகம் ரோமில் உள்ள சாண்டா மரியா மெஜியோர் தேவாலயத்தில் பளிங்கு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.