Friday , 25 April 2025
தி டோர்

“தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

Spread the love

“தி டோர்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

மலையாள திரையுலகின் முன்னனி நடிகையான பாவனா, 2006-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன் பின்னர் வெயில், தீபாவளி, வாழ்த்துகள்,கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இவர் கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார்.

5 வருட இடைவெளிக்கு பிறகு 2023-ம் ஆண்டு வெளியான ‘என்டிக்காக்கக்கொரு பிரேமண்டார்ன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரையுலகத்துக்கு திரும்பினார் நடிகை பாவனா. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹன்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

அதன் பிறகு பெரிய அளவில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு தி டோர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை ஜெய் தேவ் இயக்குகிறார். ஜூன் ட்ரீம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் ராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

மிஸ்டரி திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க தவறிவிட்டது – சஜித் !

Check Also

Bigg Boss Tamil Season 8 Live

Spread the loveBigg Boss Tamil Season 8 Live