துப்பாக்கிகள் மீளக் கையளிப்பதை வலுவிழக்கச் செய்யும் மனுவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

துப்பாக்கிகள்
Spread the love

அனுமதிப்பத்திரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீளக் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்த அறிவிப்பை வலுவிழக்கச் செய்யும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான பரிசீலனை நேற்று இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு மீதான தீர்ப்பு கிடைக்கும் வரை தமது கட்சிக்காரர் வசமுள்ள துப்பாக்கியைத் தொடர்ந்தும் வைத்திருக்க அனுமதியளிக்குமாறு மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி கோரியுள்ளார்.

இது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக நாள் ஒன்றை ஒதுக்கித் தருமாறு பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் கோரியுள்ளார்.

இதன்படி குறித்த சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 30 ஆம் திகதி வழக்கை மீள அழைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை!