தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்வதற்கான எழுத்தானை உத்தரவை பிறப்பிக்குமாறு தோட்டக் கம்பனிகள் பல மனுவை தாக்கல் செய்திருந்தன. மனு மீதான தீர்ப்பை வெளியிடும் வகையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கின் பிரதிவாதிகள் எதிர்வரும் 26ம் திகதி விடயங்களை முன்வைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ரூபா என நிர்ணயித்தே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்து.