நச்சு வாயு கசிவு…… 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Spread the love

இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இடம்பெற்றள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அழகுசாதன உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், பொருட்களுக்கான கலவைகளை மேற்கொள்ளும் போதே இந்த இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.