நாடு முழுவதும் சீரான வானிலை!

சீரான வானிலை
Spread the love

நாடு முழுவதும் சீரான வானிலை!
காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ, கனடா தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை