பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

Spread the love

வவுனியா பூவரசங்குளத்தில் இன்று(18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு பஸ் மோதியுள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.