Tuesday , 14 October 2025
சஜித்
சஜித்

பாடசாலைகளை வகைப்படுத்தக் கூடாது – சஜித்

சமூக வகுப்புகளின் அடிப்படையில் பாடசாலைகளை வகைப்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 294 ஆவது கட்டத்தின் கீழ் மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பானர்கள் கூறும் கருத்துகளின் மீது நம்பிக்கை வைக்க முடியாது எனப் பெரும்பாலான மக்கள் கூறிவருகின்றனர்.

சிலர் அதிகாரத்தைத் தங்களது கைகளில் வைத்துக் கொண்டு தமக்கு ஏற்றவாறு ஆட்சி செய்து வருகின்றனர்.

ஆட்சி அதிகாரத்தை மாற்றும் சக்தி மக்களின் கரங்களில் உள்ளது.

அரசியலமைப்பினூடாக பிரஜைகளுக்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதனை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும்.

அதேநேரம் சாதாரண பாடசாலை, உயர் வகுப்பினருக்கான பாடசாலை என்ற பேதங்களை ஒழித்து, தமது ஆட்சியில் சகலருக்கும் சமமான கல்வியை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Check Also

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் …