பொதுத் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Spread the love

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களைப் புறக்கணித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வெளிப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிந்துஜன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

எங்களுடைய வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்தின் தரப்பில் நின்று தமிழர்களுடைய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களையே தெரிவு செய்ய வேண்டும்.

அரசியல் கட்சிகளும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என எஸ்.சிந்துஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.