Sunday , 6 July 2025

பொதுத் தேர்தல் – 439 முறைப்பாடுகள் பதிவு!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 439 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 427 முறைப்பாடுகளும், 2 வன்முறைச் சம்பவங்களும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 10 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 162 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 277 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …