Monday , 7 July 2025

பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும் GOV PAY

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று ஆரம்பமாகியது.

இலங்கை பொலிஸை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடி திட்டமாக இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​​போக்குவரத்து விதிமீறல்களுக்காக பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதத் தொகை தபால் அலுவலகத்திலேயே தற்போது செலுத்தப்படுகின்றது.

அபராதத்தை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டை பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்ததன் பின்னரே சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த முன்னோடித்திட்டம் குருணாகல், தொரட்டியாவ, மெல்சிறிபுர, கொக்கரெல்ல, கலேவெல,தம்புள்ளை, மரதன்கடவல, கெக்கிராவ, அநுராதபுரம் ஆகிய பகுதிகளின் வீதிகளை உள்ளடக்கிய வகையில் இம்மாதம் 30 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …