பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேருவளையில் நேற்றுமுன்தினம் (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
உத்தியோகபூர்வ வாகன இறக்குமதி தடையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை முன்னாள் அமைச்சர்கள் மூவர், தவறாகப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக மூன்று முன்னாள் அமைச்சர்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.