முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தைத் திருத்துவதற்கு அவசியமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சகல மதங்களிலும் உள்ள சட்டங்கள் தொடர்பில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அந்ததந்த மதத் தலைவர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடிய பின்னரே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் தற்போது நடைமுறையில் உள்ள இஸ்லாமிய மதத்துடன் தொடர்புடைய சட்டங்களை மாற்றுவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது 88 நிறுவனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 3,500க்கும் அதிகமான ஹஜ் யாத்திரிகர்கள் புனித மக்கா செல்கின்றனர்.
குறித்த 3,500 பேரும் கோட்டா முறைமையின் ஊடாக செல்கின்றனர்.
இந்தநிலையில், மேல் மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஹஜ் யாத்திரியைக்காக புனித மக்கா செல்லக் கூடியவர்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குமாறு 88 நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.