யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போராட்டம்

Spread the love

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஜனனாயக ஊழியர் சங்கத்தினரால் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் இன்று கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊழியரின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொள், எம்.சி.ஏ கொடுப்பனவை அதிகரி, கல்விசாரா ஊழியர்களை மாற்றான் வீட்டு பிள்ளையாக்காதே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் காட்சிப்படுத்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.