ரஷ்யாவிற்கு விரைவில் தகுந்த பாடம் புகட்டப்படும் – ஜெலன்ஸ்கி

Spread the love

கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் நகரான ஒடேசாவின் குடியிருப்புப் பகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஒடேசாவின் குடியிருப்பு பகுதி மீது வீசப்பட்ட குண்டுகளால் கட்டடங்கள் இடிந்து 20 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி, ரஷ்ய கொலையாளிகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தகுந்த நேரத்தில் கடுமையான தாக்குதல் நடத்தும் என்றார்.