வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளைய தினம் (24) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பத்தின் அளவு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் போதுமான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுமாறும், நிழலான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்