Thursday , 3 July 2025

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் விசேட தினம் நாளை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளை அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமக்குரிய அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று, ஆளடையாளத்தை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …