Wednesday , 2 July 2025

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (4) காலை வியட்நாமை சென்றடைந்தார்.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று முதல் மே 6ஆம் திகதி வரை வியட்நாமில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தின் போது, வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், சிரேஷ்ட அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும் இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும், வியட்நாமுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …