கிளிநொச்சி, ராமநாதபுரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான நடவடிக்கை தொடர்பில் சந்தேக நபரை கைது செய்ய முயன்ற சிறப்புப் படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 முதல் 32 வயது வரையிலான 5 ஆண்களும், 26 முதல் 45 வயது வரையிலான 5 பெண்களும் இதில் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும், காயமடைந்த விசேட அதிரடிப் படை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.