Monday , 13 October 2025

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நிறைவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டது.

49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் வாக்களிக்க 17,156,338 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இதன்படி, பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 45 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக, தேர்தல் அதிகாரி துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

Check Also

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்

சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் …