Saturday , 10 May 2025
ஜனாதிபதி
FILE PHOTO: Sri Lanka's President Ranil Wickremesinghe looks on during an interview with Reuters at Presidential Secretariat, amid the country's economic crisis, in Colombo, Sri Lanka August 18, 2022. REUTERS/ Dinuka Liyanawatte

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா?

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு சத்தியமா?

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை.

முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கருத்துரைத்திருந்தார்.

எனினும், இந்த கருத்து சொந்த கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சி தரப்பிலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

அதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் ஆறு வருட கால எல்லையானது சர்வசன வாக்கெடுப்பு மூலம் மக்களின் அங்கீகாரம் இல்லாமல் ஐந்து வருடங்களாக குறைக்கப்பட்டது என்ற வாதம் இந்த சந்தர்ப்பத்தில் முன்வைக்கப்படுகிறது.

எனவே, ஆறு ஆண்டுகளுக்கு மேல் பதவிக் காலத்தை நீடிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றால், தற்போதுள்ள ஐந்தாண்டு வரம்பை வாக்கெடுப்பு நடத்தாமல் மேலும் ஓராண்டுக்கு நீடிக்க முடியும் என்றும் வாதிடப்படுகிறது.

இந்தநிலையில், அனைத்து சாத்தியமான மற்றும் அசாத்தியமான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …