பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் அவர் அங்கு சென்றால் தந்தையும் மகனும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு 15 முதல் 18 கோடி வரை ஊதியம் பெறுவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியாளர்களை எதற்காக வந்திருக்கீங்க, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்க வந்திருக்கீங்களா என காட்டமாக கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்ச்சியை அவருக்கே உரித்தான ஸ்டைலில் அவர் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பெண்கள் அணியும் ஆண்கள் அணியும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பெண்கள் அணியில் இருந்து அபியும் ஆண்கள் அணியில் இருந்து முத்துக்குமரனும் வீட்டை மாற்றி இருக்கிறார்கள். இதையடுத்து பல சண்டைகள், பிராங்குகள், தங்கள் அணிக்குள்ளேயே மோதல், எதிரணியுடன் மோதல் என சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் முதல் வார இறுதியில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி அவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். அப்படியிருக்க பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்து நிகழ இருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது. அதாவது விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கிறாராம்.

இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் ஃபீனிக்ஸ் வீழான் என்ற படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை அவர் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பிக்கிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகிறது. எந்த படத்தையும் புரமோட் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது மகன் சூர்யாவின் பட புரமோஷனுக்காக அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்