அடேங்கப்பா..!! பிக்பாஸ் Wild Card என்ட்ரிக்கு இவ்வளவு சம்பளமா.?

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 9, ஒவ்வொரு நாளும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நிகழ்ச்சியின் உச்ச தருணங்கள், போட்டியாளர்களின் சண்டைகள் மற்றும் சுவாரஸ்யமான டாஸ்க் என இதுவரை பார்வையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளித்து வருகின்றன.

ஆனால், இந்த சீசனில் உள்ளே இருந்த சில போட்டியாளர்கள் சரியான விளையாட்டை விளையாடாத காரணத்தால், பிக்பாஸ் அதிரடியாக 4 புதிய போட்டியாளர்களை வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வீட்டிற்குள் அனுப்பினர்.

அதனடிப்படையில் பிரஜன், சாண்ட்ரா, சீரியல் நடிகை திவ்யா கணேஷ் மற்றும் அமித் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த புதிய போட்டியாளர்களின் வருகை வீட்டு சூழ்நிலையை மாற்றி, அதிர்ச்சியையும் சுவாரஸ்யத்தையும் கொடுத்திருந்தது.

இந்நிலையில், வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு வழங்கப்பட்ட சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. தகவலின் படி, ஒரு நாளைக்கு சாண்ட்ரா ரூ. 15,000 , திவ்யா கணேஷ் மற்றும் அமித் ரூ. 20,000 மற்றும் பிரஜனுக்கு ரூ. 25,000 சம்பளம் எனவும் கூறப்படுகின்றது.

இந்த சம்பள விவரங்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. எனினும் இத்தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.