A/L விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு

A/L விடைத்தாள் திருத்தம் – கொடுப்பனவு குறித்த முடிவு

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் 14.06.2024 அன்று கிடைக்கப்பெறவுள்ளதுடன், மேற்படி அறிக்கை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கேற்ப கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Check Also

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் …