Raju Maskeliya

மலையக ரயில் சேவை ஸ்தம்பித்தது

கொட்டகலையில் ரயில் தடம்புரண்டதால் மலையக மார்க்க ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More »

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு! நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

வடமாகாண பாடசாலைகள் வழமைபோன்று நாளை நடைபெறும்

வடமாகாண பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை நடைபெறும் என்றும் புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.

Read More »

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளத்தை உறுதி செய்த வர்த்தமானி

தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்வதற்கான எழுத்தானை உத்தரவை பிறப்பிக்குமாறு தோட்டக் கம்பனிகள் பல மனுவை தாக்கல் செய்திருந்தன. மனு மீதான தீர்ப்பை வெளியிடும் வகையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் பிரதிவாதிகள் எதிர்வரும் 26ம் திகதி விடயங்களை முன்வைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ரூபா என நிர்ணயித்தே இந்த வர்த்தமானி அறிவித்தல் …

Read More »

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

Read More »

தலவாக்கலையில் ஈரான் ஜனாதிபதிக்கு ஆத்ம சாந்திப் பிராத்தனை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31) இடம்பெற்றது..

Read More »

தென்மராட்சி மண்ணின் பெருமை மதியழகன் டினோஜன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடத்தைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47 வது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Read More »

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சாதனை சித்தி

கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அதேவேளை, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மத்திய மாகாண அளுநர் தலைமையில் 50 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான கற்பித்தல் செயற்பாட்டில் பட்டதாரிகளின் சேவைகளை வளவாளர்களாகப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) மற்றும் மனித நேயம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் பூரண நிதிப் பங்களிப்பில் நடைமுறைப்படுத்துகின்றது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய மாகாண ஆளுநரின் சட்டத்தரணி லலித் யு. கமகே தலைமையில் கண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது. இதன் கீழ் 50 வளவாளர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மாகாண கல்வி அமைச்சின் உடன்படிக்கையின் கீழ் …

Read More »