BMW ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவருக்கு பிணை!

Spread the love

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய பி.எம்.டபிள்யூ ரக சொகுசு வாகனம் தொடர்பில் கைதான மேலும் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.