Sunday , 6 July 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம்

யாழ்

யாழ் இளைஞனின் இறப்பில் சந்தேகம் மேற்படி இளைஞனை கொடிகாமம் பகுதியிலிருந்து கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் வாகீசன் தலைமையிலான போதைக்கு, சாராயத்துக்கு அடிமையாகிய குழு ஒன்று இளைஞரை அழைத்துச் சென்றுள்ளது எனவே அந்தக் குழுவினரே திட்டமிட்ட முறையில் இந்த இளைஞனை கொலை செய்திருக்கலாம் என சந்தேக்கப் படுகின்றது தீர விசாரிக்கப்படவேண்டும் பல தகவல்கள் வந்தவண்ணமுள்ளது…. கொடிகாமம் பொலிசில் கடமையாற்றும் பொலிஸ் வாகீசன் இவர் ஊழல்,காம சேட்டைகள், வயது குறைந்தவர்களை வளைத்து மது அருந்துவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களுண்டு . இது தொடர்பில் யாழ் பொலீஸ் …

Read More »

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

விபச்சார விடுதி

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு கண்டி, தவுலகல பிரதேசத்தில் உள்ள சொகுசு வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் கண்டி பொலிஸாரால் இன்று புதன்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் விபச்சார விடுதியின் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …

Read More »

இளம்பெண் கழுத்து அ று க் க ப் ப ட் டு ப டு கொ லை !

இளம்பெண்

இளம்பெண் கழுத்து அ று க் க ப் ப ட் டு ப டு கொ லை ! மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. …

Read More »

பிள்ளையானின் சாரதி சி.ஐ.டி. யினரால் வாழைச்சேனையில் வைத்து கைது !

பிள்ளையானின் சாரதி

பிள்ளையானின் சாரதி சி.ஐ.டி. யினரால் வாழைச்சேனையில் வைத்து கைது ! மட்டக்களப்பு வாழைச்சேனையில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனின் சாரதியான ஜெயந்தன் என்பரை வெள்ளிக்கிழமை (18) காலையில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 8 …

Read More »

NPPயின் ஊழல் அரசியலால் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு – சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தியின் ஊழல் அரசியலால் பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மின்னேரியா, எலஹெர பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கம், மக்களை ஏமாற்றி, தான் சொல்வதைச் செய்யாத ஒரு பொய், வஞ்சக மற்றும் ஊழல் நிறைந்த அரசாங்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி அரிசி, பால்மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. …

Read More »

வெலிக்கடை சம்பவம் – உயிரிழந்த இளைஞனின் சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் மரணித்த நிமேஷ் சத்சாரவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக 23ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 23 ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக உடலைத் தோண்டி எடுக்கக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அனுமதி கோரியதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நிமேஷ் சத்சாரவின் உடலைத் தோண்டி எடுக்கும் போது, அதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கொழும்பு மேலதிக …

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் …

Read More »

பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்; “நான் இன்று நடத்தும் இந்த ஊடக சந்திப்பு எனது வாழ்நாளில் ஒருபோதும் நடத்தவேண்டும் என்று எதிர்பார்த்ததில்லை. நான் பிள்ளையானை சந்தித்தது அரசியல்வாதியாக அல்ல. ஒரு சட்டத்தரணியாக. என் அரசியல் வாழ்க்கையும் தொழில்முறை வாழ்க்கையும் தெளிவாக பிரித்திருக்கிறேன். அதனால் தான், …

Read More »

VAT வரி தொடர்பில் அரசின் புதிய நிலைப்பாடு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டு சுட்டிக்காட்டுகிறது. உள்நாட்டு வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. …

Read More »

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு மதியம் 12 மணி வரை மட்டுமே இடம்பெறும் என என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அறிவித்துள்ளது. ஒரு நாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை அந்த நாட்களில் இயங்காது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More »