Tuesday , 14 October 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

வெலிக்கடை சம்பவம் – உயிரிழந்த இளைஞனின் சடலத்தைத் தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவு

வெலிக்கடை காவல்துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் மரணித்த நிமேஷ் சத்சாரவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக 23ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 23 ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக உடலைத் தோண்டி எடுக்கக் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அனுமதி கோரியதாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் ரிஸ்வான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நிமேஷ் சத்சாரவின் உடலைத் தோண்டி எடுக்கும் போது, அதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு கொழும்பு மேலதிக …

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அஞ்சல் மூல வாக்களிப்பு திகதிகளில் மாற்றம்

எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு சில தினங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதன்படி 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக 22ஆம், 23ஆம் திகதிகளில் அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்ப்பின் நிமித்தம், அந்தத் திகதிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட மேலதிக நாட்களான 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் …

Read More »

பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். இது குறித்து அவர் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்; “நான் இன்று நடத்தும் இந்த ஊடக சந்திப்பு எனது வாழ்நாளில் ஒருபோதும் நடத்தவேண்டும் என்று எதிர்பார்த்ததில்லை. நான் பிள்ளையானை சந்தித்தது அரசியல்வாதியாக அல்ல. ஒரு சட்டத்தரணியாக. என் அரசியல் வாழ்க்கையும் தொழில்முறை வாழ்க்கையும் தெளிவாக பிரித்திருக்கிறேன். அதனால் தான், …

Read More »

VAT வரி தொடர்பில் அரசின் புதிய நிலைப்பாடு

பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வெட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டு சுட்டிக்காட்டுகிறது. உள்நாட்டு வருவாய்த் துறை வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. …

Read More »

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் விசேட அறிவித்தல்

கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு மதியம் 12 மணி வரை மட்டுமே இடம்பெறும் என என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அறிவித்துள்ளது. ஒரு நாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை அந்த நாட்களில் இயங்காது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More »

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் ஏற்கத் தயார் – பொன்சேகா

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஒரு இணைய வாயிலாக தனியார் சேனலுடனான உரையாடலில், தனக்கு அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால், அதை ஏற்கத் தயங்க மாட்டேன் என்று அவர் கூறினார். இருப்பினும், ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு அவர் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Read More »

பொருட்களின் விலைகள் இன்னும் குறையவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும் – ஹரிணி அமரசூரிய

நாட்டில் உருவாக்கப்படும் மோதல்களால் மக்கள் இனியும் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகக் கூடாது என்றும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும், மக்களின் தேவைகளை நிறவேற்றுவதற்கு அரசாங்கத்தைப் போன்றே அரசாங்க சேவையும் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணம், வேலணை, நீர்வேலி மற்றும் வடமராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வட மாகாணத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் …

Read More »

யாழில் வீதியில் சென்ற மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் 82 வயது மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 33 வயதுடைய டிப்பர் சாரதி கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Read More »

மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

ஒரு நாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாரு அறிவிக்கப்படுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கான 24 மணி நேர ஒரு நாள் வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவை அந்த நாட்களில் இயங்காது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More »

உயிர் அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு ஓட்டமெடுத்த பெண் சட்டத்தரணி!

பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், பெண் வழக்கறிஞர் ஒருவர் வெளிநாடு சென்றுள்ளார். பெண் வழக்கறிஞர் உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று கூறப்படும் சந்தேக நபர்களுக்காக அவர் ஆஜராவதால், மற்ற தரப்பினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கடை நீதிமன்றத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சார்பில் உள்ள வழக்குகளில் ஆஜராவதற்காக , வேறு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிப்பு விடுத்த …

Read More »