டிரம்ப்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை’ – மிச்சேல் ஒபாமா மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமலா ஹாரிசை ஆதரித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை மிச்சேல் ஒபாமா முன்வைத்தார். தனது பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;- “இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஏன் இன்னும் கணிசமான அளவில் ஆதரவு கிடைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. வேட்பாளர்கள் அனைத்து தகுதிகளையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு வாக்காளர்களுக்கு அனைத்து …
Read More »ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி
ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி ரஷியாவின் கிரோவ் மாகாணத்தில் இருந்து எம்.ஐ-2 என்ற ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. இதில் டாக்டர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர். பெலீங்கி என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதில் இருந்த 4 பேரும் உடல் சிதறி பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து …
Read More »பிலிப்பைன்சில் கனமழை – 81 பேர் பலி
பிலிப்பைன்சில் கனமழை – 81 பேர் பலி பிலிப்பைன்சில் உருவான டிராமி புயல் அந்நாட்டின் பல மாகாணங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக அந்நாட்டின் இசபெலா, இபுகாவோ, படாகஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் காரணமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், பிலிப்பைன்சில் வீசிய புயலால் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் …
Read More »ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கடந்த ஏப்ரல் 13ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த 2 தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது இஸ்ரேல் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈரான் …
Read More »ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! | Israel launches air strikes on Iran
ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!
ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! ஒக்டோபர் 7ஆம் திகதி ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் நோக்கில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது! ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது. மலையகத் தமிழர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆலோசனை – விஜித ஹேரத்
Read More »இலங்கையர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலை!
கனடாவில் பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
Read More »இஸ்ரேலிய பிரதமரின் இல்லத்தின் மீது தாக்குதல்!
லெபனானிலிருந்து இன்று காலை இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தினால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான இல்லம் தாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வடக்கு கரையோர நகரமான செசேரியாவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த தாக்குதலின்போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ, அவரது குடும்பத்தினரோ அங்கு இருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
Read More »ஒன்று கூடலுக்கு தடை. உள்துறை அமைச்சு.
நாளை (07/07) பிரான்சில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது இறுதி சுற்று நடைபெற உள்ளது. இதில் தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை பலத்தை பெறாவிடினும் அதிக ஆசனங்கள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டில் அசம்பாவிதங்கள், கலவரங்கள் இடம் பெறலாம் என புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், நாடு பூரண பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளது. இன்று 06/07 நள்ளிரவில் இருந்து நாடுமுழுவதும் சுமார் 30,000 காவல்துறையினரும், Gendarmerie பாதுகாப்பு படையினரும், GIGN இராணுவ பாதுகாப்பு வீரர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உள்துறை …
Read More »பைடன், ட்ரம்ப் நேரடி விவாதம்.. அனல் பறந்த குற்றச்சாட்டுகள்
பைடன், ட்ரம்ப் நேரடி விவாதம்.. அனல் பறந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்களான அதிபர் ஜோ பைடன், ட்ரம்ப் இடையே முதலாவது நேரடி விவாதம் நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அட்லான்டாவின் சிஎன்என் ஊடக ஸ்டூடியோவில் ஜோ பைடன், ட்ரம்ப் இடையேயான நடந்த முதலாவது நேரடி விவாதம் இது. வெளியுறவு, பொருளாதாரம், குடியுரிமை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதம் செய்தனர். இருவரும் அவரவர் ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட …
Read More »