Friday , 10 October 2025

செய்திகள்

செய்திகள்

ஒன்று கூடலுக்கு தடை. உள்துறை அமைச்சு.

ஒன்று கூடலுக்கு தடை. உள்துறை அமைச்சு.

நாளை (07/07) பிரான்சில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது இறுதி சுற்று நடைபெற உள்ளது. இதில் தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை பலத்தை பெறாவிடினும் அதிக ஆசனங்கள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டில் அசம்பாவிதங்கள், கலவரங்கள் இடம் பெறலாம் என புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், நாடு பூரண பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளது. இன்று 06/07 நள்ளிரவில் இருந்து நாடுமுழுவதும் சுமார் 30,000 காவல்துறையினரும், Gendarmerie பாதுகாப்பு படையினரும், GIGN இராணுவ பாதுகாப்பு வீரர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உள்துறை …

Read More »

பைடன், ட்ரம்ப் நேரடி விவாதம்.. அனல் பறந்த குற்றச்சாட்டுகள்

பைடன்

பைடன், ட்ரம்ப் நேரடி விவாதம்.. அனல் பறந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்களான அதிபர் ஜோ பைடன், ட்ரம்ப் இடையே முதலாவது நேரடி விவாதம் நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அட்லான்டாவின் சிஎன்என் ஊடக ஸ்டூடியோவில் ஜோ பைடன், ட்ரம்ப் இடையேயான நடந்த முதலாவது நேரடி விவாதம் இது. வெளியுறவு, பொருளாதாரம், குடியுரிமை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதம் செய்தனர். இருவரும் அவரவர் ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட …

Read More »

வன்முறை சம்பவங்கள்- யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

வன்முறை சம்பவங்கள்- யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐந்து பேரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், வர்த்தக நிலைய தீ வைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 24 வயதான சந்தேகநபரே இவ்வாறு …

Read More »

மீன்பிடிக்க சென்ற இருவர் மாயம்

அனலைத்தீவு கடற் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

அமெரிக்க ஜனாதிபதி மகன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை தண்டனைகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More »

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு

பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயதுடைய நுகேகொட மஹாமாயா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழப்பு, மாணவியின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .

Read More »

ஜனாதிபதிக்கும் சார்க் பொதுச் செயலாளருக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதிக்கும் சார்க் பொதுச் செயலாளருக்கும் இடையே சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சார்க் நாடுகளுக்கிடையிலான பல்வேறு திட்டங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் பாரபட்சமின்றி தலையீடு செய்யுமாறு சார்க் பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். இலங்கையில் செயற்படுத்தப்படும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்கு சார்க் நாடுகளின் …

Read More »

A/L விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு

A/L விடைத்தாள் திருத்தம் – கொடுப்பனவு குறித்த முடிவு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தம் செய்யும் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் 14.06.2024 அன்று கிடைக்கப்பெறவுள்ளதுடன், மேற்படி அறிக்கை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், அதற்கேற்ப கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More »

யாழ்ப்பாண அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

அதிபர் – ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று (12) தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ” சுபோதினி ஆணைக்குழுவின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு சம்பள உயர்வை வழங்கு, மாணவர்களுக்கான போசாக்கு நிலையை உறுதிப்படுத்து, பெற்றோர் மீது சுமையை அதிகரிக்காதே, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு,அதிபர் ஆசிரியர்களை ஏமாற்றாதே மற்றும் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துக” உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை …

Read More »

ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலை

ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலை குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரை 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய குளியாப்பிட்டிய நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது. வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியையின் புகைப்படத்தை மீண்டும் ஆபாசமாக சித்தரித்தால் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்படும் …

Read More »