பொடி மெனிகே ரயிலின் எஞ்சின் தீப்பிடித்தது கொழும்பு, கோட்டை நிலையத்தில் இருந்து பதுளையை நோக்கி பயணித்த பொடிமெனிக்கே ரயிலின் எஞ்சின், ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் வைத்து தீப்பிடித்தது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையினை, ரயில்வே திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு! நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளத்தை உறுதி செய்த வர்த்தமானி
தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்வதற்கான எழுத்தானை உத்தரவை பிறப்பிக்குமாறு தோட்டக் கம்பனிகள் பல மனுவை தாக்கல் செய்திருந்தன. மனு மீதான தீர்ப்பை வெளியிடும் வகையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் பிரதிவாதிகள் எதிர்வரும் 26ம் திகதி விடயங்களை முன்வைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ரூபா என நிர்ணயித்தே இந்த வர்த்தமானி அறிவித்தல் …
Read More »நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
Read More »தலவாக்கலையில் ஈரான் ஜனாதிபதிக்கு ஆத்ம சாந்திப் பிராத்தனை
விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31) இடம்பெற்றது..
Read More »தென்மராட்சி மண்ணின் பெருமை மதியழகன் டினோஜன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடத்தைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47 வது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Read More »யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சாதனை சித்தி
கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அதேவேளை, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Read More »உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு: சாதனைப் படைத்த யாழ் இளைஞன்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(31) வெளியாகின. வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ் மாவட்ட மட்டத்தில் மதியழகன் டினோஜன் என்ற மாணவன் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மதியழகன் டினோஜன் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.
Read More »கத்தாரில் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வயது 3 ஆக குறைப்பு!
3 வயதில் மழலையர் பள்ளி வகுப்புகளில் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான யோசனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2024.05.22ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி வகுப்புகளில் (kindergarten) இதுவரை காலமும் மாணவர்கள் 4 வயதில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். என்றாலும் இந்த வயதெல்லையை 4யிலிருந்து 3 ஆக குறைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தலைமையிலான அமைச்சரவையின் வழக்கமான கூட்டத்திற்கு அமிரி திவானில் 2024.05.22 அன்று …
Read More »