நாட்டின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை! நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும். மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை, …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.10.2024 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.10.2024 | Sri Lanka Tamil News
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 23.10.2024 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 23.10.2024 | Sri Lanka Tamil News
Read More »ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதிக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ட்ரே ப்ரென்ச் (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (22) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புக்களை மார்க் அன்ட்ரே ப்ரென்ச் உறுதிப்படுத்தினார். அத்துடன், இலங்கையின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் மகளிருக்கான ஊக்குவிப்பு வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க ஆர்வமுடன் இருப்பதாக மார்க் அன்ட்ரே …
Read More »ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!
வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார். பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ ரக வாகனத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்காக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More »வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பான அறிவிப்பு
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேட தினங்களாக ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 3ஆம் திகதிகள் கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். “நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலாளர் அலுவலகங்களில் பொதுத்தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகளை வழங்கும் பணிகள் இன்று …
Read More »ஜனாதிபதி மாற்றம் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணம்?
”நாட்டின் சந்தையில் தற்பொழுது தேங்காய் விலை அதிகரித்துள்ளது. பாக்கின் விலை அதிகரித்துள்ளது. முட்டை ஒன்று 30 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள். ஆனால் தற்பொழுது 50 ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவா மாற்றம்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு நேற்று (22) மாலை நுவரெலியா – நானுஓயா காந்தி கலாச்சார மண்டபத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் …
Read More »இலங்கையர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலை!
கனடாவில் பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.
Read More »பொதுத் தேர்தல் – 439 முறைப்பாடுகள் பதிவு!
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 439 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 427 முறைப்பாடுகளும், 2 வன்முறைச் சம்பவங்களும், ஏனைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 10 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 162 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 277 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
Read More »ரணிலை பிரதிவாதியாக இணைப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
சோசலிச இளைஞர் சங்கத்தினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதிவாதியாக இணைப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு சோசலிச இளைஞர் சங்கம் நடத்திய போராட்டத்தின் மீது காவல்துறையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுக் கலைக்கப்பட்டமைக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சோசலிச இளைஞர் சங்க உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்போது, மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை …
Read More »