மாகாண சபை பொறிமுறையை நெறிப்படுத்துவதற்கான பரிந்துரையொன்றைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) முற்பகல் நடைபெற்ற மாகாண ஆளுநர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மாகாண சபைகளின் கீழ் உள்ள சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அதற்குச் சாதகமான தீர்வுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போதைய நிலைமாறு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை இலகு படுத்துவதற்கு மாகாண சபைகளினால் வழங்கக் கூடிய உச்ச சேவையை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் …
Read More »ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கை – பகிரங்கப்படுத்திய உதய கம்மன்பில!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரையில் வெளியிடப்படாத விசாரணை அறிக்கையொன்றை இன்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பகிரங்கப்படுத்தினார். குறித்த அறிக்கையை வெளிப்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் தயங்கியமைக்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு 2019 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபயவிடம் 2021 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டதுடன், அப்போதே அந்த …
Read More »பாடசாலை மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி!
தூய்மையான இலங்கை என்ற பெயரில் ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பகுதயில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றுச் சூழலை இலக்காக கொண்டு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளன. அனைவருக்கும் சமமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நிறுத்தப்பட்டுள்ள விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு உரிய முறையில் விசாரணை செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் …
Read More »காணாமல் போயிருந்த மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்பு!
காணாமல் போயிருந்ததாகக் கூறப்படும் கந்தேககெதர பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய 2 மாணவிகளில் ஒருவர், மஹியங்கனை – லொக்கல் ஓயாவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரே பாடசாலையில் கல்வி கற்றுவந்த, இரு மாணவிகள், பதுளை நகருக்கு மேலதிக வகுப்புக்குச் செல்வதாகக் கூறி, நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தனர். எனினும், அவர்கள் வீடு திரும்பாதமையினால், அவர்களது பெற்றோர் பதுளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில், அதாவுல்பத்த பகுதியில் வீதியோரமாக நின்றிருந்தபோது நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்ட அவர்களில் ஒரு மாணவி, நபர் ஒருவரால் ரிதீமாலியத்த காவல்நிலையத்தில் …
Read More »ஜே.பி.வி தற்போதும் இனவாதத்தைக் கைவிடவில்லை – சிவாஜிலிங்கம்!
ஜே.பி.வியினர் இனவாதத்தை இன்னும் கைவிடவில்லை என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்குப் பொருளாதார ரீதியாக மாத்திரமே பிரச்சினை உள்ளதாகவும், 13ஆம் திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் அங்குள்ள இளைஞர்கள் கவலைப்படவில்லை என ஜே.பி.வியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார். அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, ஓராண்டுக் காலம் அவகாசம் வழங்கி …
Read More »பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 738,659 பேர் தகுதி!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 759,210 அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார் அதில் 20,551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் மூல விண்ணப்பங்களின் படி, 738,659 பேர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் …
Read More »வாகனப் பாவனை குறித்து மஹிந்தவின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனை மற்றும் பாதுகாப்புக்காக தற்போது ஆறு வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் வழங்கிய பணிப்புரைக்கு அமைய, ஆறு வாகனங்களில் நோயாளர் காவு வண்டி உட்பட 3 வாகனங்களை நாளைய தினம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதனை ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச புலனாய்வு சேவையினால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின்படி, நாட்டின் அரசியல் …
Read More »பொதுத் தேர்தல் தொடர்பில் 401 முறைப்பாடுகள் பதிவு!
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 401 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கிடைக்கப்பெற்றுள்ள சகல முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறலுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தேர்தல் வன்முறை தொடர்பில் இதுவரையில் எந்தவித முறைப்பாடுகளும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை, பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய 309 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 92 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More »ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும் – சஜித்!
எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டமும் தொலைநோக்குப் பார்வையும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தக்கூடிய திறமையான உறுப்பினர்களைக் கொண்ட குழுவையும் ஐக்கிய மக்கள் சக்தியே கொண்டுள்ளது. தன்னாலும் ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும். குறுகிய அரசியல் …
Read More »இஸ்ரேலிய பிரதமரின் இல்லத்தின் மீது தாக்குதல்!
லெபனானிலிருந்து இன்று காலை இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தினால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான இல்லம் தாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வடக்கு கரையோர நகரமான செசேரியாவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த தாக்குதலின்போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ, அவரது குடும்பத்தினரோ அங்கு இருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
Read More »