முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

சந்தையில் மேலும் அதிகரித்த தேங்காய் விலை!

சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். இதன்படி, சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 170 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி அடுத்த சில நாட்களில் தேங்காய் விலையில் எவ்விதக் குறைவும் ஏற்படாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More »

பொதுத் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டும் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தென்னிலங்கை வேட்பாளர்களைப் புறக்கணித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களது உரிமைகளை வெளிப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிந்துஜன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எங்களுடைய வடக்கு கிழக்குத் தமிழர்கள் தமிழ்த்தேசியத்தின் தரப்பில் நின்று தமிழர்களுடைய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களையே தெரிவு செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளும் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என எஸ்.சிந்துஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More »

அனுரவால் தனியாக நாட்டை நடத்த முடியாது – ஹரிணி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமைசாலியாக இருந்தாலும் அவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மஹரகமவில் இன்று (19) இடம்பெற்ற பேரணியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் கடந்த 75 வருடங்களாக ஆட்சியிலிருந்த எவரும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைக்கும் என நினைக்கவில்லை. அந்த அதிகாரத்தை மக்கள் தமக்கு வழங்கியதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்புவது கடினம் எனவும் இம்முறை நல்லதொரு …

Read More »

அதிரடியாக போட்டியாளர்களை திணறடித்த விஜய் சேதுபதி.. இனிதான் ஆட்டம் ஆரம்பம்

தமிழக மக்களின் நெஞ்சம் வென்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் பல அதிரடி திருப்பங்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத வகையில் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி அதிரடியில் அசத்தி வருவது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, ஆண், பெண் என இரண்டாகப் பிரிக்கப்பட்ட வீடு எனப் பல புதுமைகளுடன், முதல் எபிஸோடு முதலே ரசிகர்களை ஈர்த்து …

Read More »

ஆண் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ்.. தர்ஷா கேட்ட கேள்வி!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 15ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் உருட்டு டாஸ்க்கில் ஆண்கள் சம்பாதித்த பணத்தை விட அதிகமாக செலவு செய்து விட்டதால் அவர்களுக்கு பிக் பாஸ் தண்டனை கொடுத்திருக்கிறார். அதைக்கேட்ட தர்ஷா குப்தா ஆண் போட்டியாளர்களை விளாசி எடுத்து இருக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி பெரிய அளவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்களில் 14 போட்டியாளர்கள் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கின்றனர். இதில் …

Read More »

தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!

பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, குறித்த தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். பொதுத் தேர்தல் செலவு வரம்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த தேர்தல் செலவுகள் தொடர்பில் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுடன் அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கலந்துரையாடல்களின்போது எட்டப்படும் முடிவுகளுக்கமைய, வேட்பாளர் ஒருவரால் வாக்களருக்கு செலவிடக்கூடிய உச்சபட்ச தொகை உள்ளிட்ட விடயங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் …

Read More »

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நிர்வாகச் சீர்கேடு – நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேட்டை மையப்படுத்திய புதிய வழக்கொன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான மார்க்கண்டு நடராசா இந்த வழக்கை நேற்றைய தினம் சமர்ப்பித்ததாக அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன. தற்போது பதவியில் உள்ள கட்சியின் செயலாளர் பொதுச் சபையின் மூலம் தெரிவு செய்யப்படாத, சட்டரீதியற்ற செயலாளர் என்பதால் அவர் செயலாளர் பதவியில் தொடர்வதற்கு இடைக்காலத் தடை உத்தரவு விதிக்க வேண்டும் என்றும், கட்சியின் யாப்பின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை …

Read More »

ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு – 8,000 ரூபாவை வழங்க அனுமதி!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 8,000 ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

Read More »

சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி செயற்படுகிறது – டக்ளஸ்

இலங்கை தமிழரசு கட்சி சுயலாப நோக்கத்தின் அடிப்படையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள், வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read More »

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவுள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் அவர் அங்கு சென்றால் தந்தையும் மகனும் சந்திக்கும் போது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்கு 15 முதல் 18 கோடி வரை ஊதியம் பெறுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் போட்டியாளர்களை எதற்காக வந்திருக்கீங்க, …

Read More »