விஜய் Work From Home-லிருந்து Work From Field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி – தமிழிசை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், Work from home-லிருந்து work from field-க்கு வந்திருப்பது மகிழ்ச்சி என தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்பதால் விஜய் தனது கட்சியில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – ரஷ்ய அதிபர்
Read More »எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார் – ரஷ்ய அதிபர்
“எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு நடத்தத் தயார்” – ரஷ்ய அதிபர் எந்தவித முன் நிபந்தனையுமின்றி உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என்று ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய புதினின் செய்தித் தொடர்பாளர், டிரம்ப்பின் சிறப்புத் தூதராக வந்த விட்காஃபிடம் புதின் பேச்சு நடத்தியபோது போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே உக்ரைனில் அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் தொடுத்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். …
Read More »அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை !
அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை ! அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டார். ஜானாதிபதி அனுர குமார திஸாநாயக ஜனாதிபதி மாளிகையில் தங்குவதில்லை என கூறிய அவர் முன்னரை போல் இன்று பெலவத்த கட்சி காரியாளயத்தில் ஒரு சிறிய அறையில் தங்குவாக குறிப்பிட்டார். அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை எனவும் அவர் கூறினார். பழைய …
Read More »பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு
பழைய கதைகளை சொல்லி அரசியல் செய்ய நான் வரவில்லை – த.வெ.க தலைவர் விஜய் பேச்சு கோவை என்றாலே மண்ணோடு, மக்களோட மரியாதை தான் நியாபகத்திற்கு வரும் ஓட்டுக்காக நடக்கும் பூத் கமிட்டி கூட்டம் அல்ல இது… மக்களுடன் சேர்ந்து செயல்படுவது பற்றிய ஆலோசனை கூட்டம் பொய்களை சொல்லி ஆட்சியை பிடித்ததுபோல் இனி நடக்காது பொய் சொல்லி இனி யாரையும் ஆட்சியை பிடிக்க விடமாட்டோம் களம் ரெடியாக இருக்கிறது…. போய் கலக்குங்க…. – விஜய் மனதில் நேர்மை இருக்கிறது… கறைபடியாமல் இருக்கிறோம்… நம்பிக்கையோடு இருப்போம்…. …
Read More »உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள் கைது
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி) 330 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 259 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 71 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்களும் 111 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் …
Read More »மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி கிடையாது – ஜனாதிபதி அனுர
எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரை விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு …
Read More »வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் விசேட தினம் நாளை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமக்குரிய அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று, ஆளடையாளத்தை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Read More »உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
Read More »உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அமாஷா துலாரி பெரேரா, 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வணிகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த …
Read More »சிந்துநதி ஒப்பந்தத்தை மீறியதற்கு பாகிஸ்தான் கண்டனம்!
சிந்துநதி ஒப்பந்தத்தை மீறியதற்கு பாகிஸ்தான் கண்டனம்! சிந்து நதி ஒப்பந்தத்தை மீறியுள்ள இந்தியாவின் செயலை, போர் போன்ற நடவடிக்கையாக பார்ப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நடவடிக்கையை கண்டிப்பதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானை, இந்தியா தொடர்பு படுத்துவதை கண்டிப்பதாகக் கூறி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு துணை பிரதமர் இஷாக் தர் தீர்மானத்தை கொண்டுவந்தார். இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம்.. தீர்மானத்தின் மீது பேசிய அவர், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தான் எதிர்ப்பதாக கூறியுள்ளார். ஆனால், குறுகிய அரசியல் நோக்கத்துக்காக …
Read More »