இந்தியா செய்திகள்

இந்தியா செய்திகள்

இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்

மூன்றாவது முறையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர். நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா நேற்று (09) பிற்பகல் புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது. நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் …

Read More »

தேர்தல் பத்திரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்குத் தகுதியில்லை – அமித் ஷா

தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜகவுக்கு 6ஆயிரம் கோடி கிடைத்தது. ஆனால் எதிர்க்கட்சியினருக்கு 14 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜகவை கேள்வி கேட்கும் தகுதி எதிர்க்கட்சியினருக்கு இல்லை என்று கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என்றும் அமித் ஷா இந்தியா டுடே கருத்தரங்கில் தெரிவித்தார். எதிர்க்கட்சியினர் ஊழல்கள் மூலமாக மக்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்ததாக அவர் விமர்சித்தார்.

Read More »

ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் – மோடி

ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அமலாக்கத்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய பிரதமர், எதிர்க்கட்சிகள் அமலாக்கத்துறையினர் மீது கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார். 2014ம் ஆண்டு தாம் ஆட்சிக்கு வரும் முன்பு அமலாக்கத்துறை சிறிய பொருளாதார குற்றவழக்குகளை விசாரித்து வந்ததாக தெரிவித்த மோடி, முந்தைய ஆட்சிகளில் மொத்தம்1800 வழக்குகள் மட்டும் பதிவானதையும் 5 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். தாம் ஆட்சிப் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் 4700 வழக்குகள் பதிவானதையும் …

Read More »

போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம்

போலீசார்

போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம் புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும் மக்கள் கோரிக்கையை ஏற்றே காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக துணைநிலை ஆளுநருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார். இன்றைய ராசிப்பலன் – 10.03.2024

Read More »

39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் சட்டீஸ்கரின் ராஜ்நந்த்காவோன் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் போட்டி ஷிவ்மோகா தொகுதியில் கீதா ஷிவ் ராஜ்குமார் போட்டியிடுவார் என அறிவிப்பு ஷிவ்மோகா தொகுதியில் களமிறங்கும் கீதா பிரபல நடிகர் ஷிவ் ராஜ்குமாரின் மனைவியாவார் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்குகிறார் சஷிதாரூர் பெங்களூரு ஊரகத் தொகுதியில் டி.கே. சுரேஷ்குமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் போட்டி

Read More »

பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெரித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அம்மாநில திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி …

Read More »