தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்வதற்கான எழுத்தானை உத்தரவை பிறப்பிக்குமாறு தோட்டக் கம்பனிகள் பல மனுவை தாக்கல் செய்திருந்தன. மனு மீதான தீர்ப்பை வெளியிடும் வகையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் பிரதிவாதிகள் எதிர்வரும் 26ம் திகதி விடயங்களை முன்வைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ரூபா என நிர்ணயித்தே இந்த வர்த்தமானி அறிவித்தல் …
Read More »நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
Read More »தலவாக்கலையில் ஈரான் ஜனாதிபதிக்கு ஆத்ம சாந்திப் பிராத்தனை
விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31) இடம்பெற்றது..
Read More »தென்மராட்சி மண்ணின் பெருமை மதியழகன் டினோஜன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடத்தைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47 வது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Read More »யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சாதனை சித்தி
கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். மேலும், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அதேவேளை, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »மத்திய மாகாண அளுநர் தலைமையில் 50 பட்டதாரிகள் ஆசிரியர்களாக நியமனம்
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான கற்பித்தல் செயற்பாட்டில் பட்டதாரிகளின் சேவைகளை வளவாளர்களாகப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (IMHO) மற்றும் மனித நேயம் அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களின் பூரண நிதிப் பங்களிப்பில் நடைமுறைப்படுத்துகின்றது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய மாகாண ஆளுநரின் சட்டத்தரணி லலித் யு. கமகே தலைமையில் கண்டி ஆளுநர் மாளிகையில் கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது. இதன் கீழ் 50 வளவாளர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மாகாண கல்வி அமைச்சின் உடன்படிக்கையின் கீழ் …
Read More »ஒக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி அல்லது 12 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Read More »உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியீடு: சாதனைப் படைத்த யாழ் இளைஞன்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று(31) வெளியாகின. வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதப் பிரிவில் (பௌதீக விஞ்ஞானம்) யாழ் மாவட்ட மட்டத்தில் மதியழகன் டினோஜன் என்ற மாணவன் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். மதியழகன் டினோஜன் கணிதப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.
Read More »பஸ் மோதி மாணவி பலி
கம்பளை பொலிஸ் வலயத்துக்குட்பட்ட பகுதியில் பஸ் மோதி பாடசாலை மாணவியொருவர் பலியானியுள்ளார். இன்று காலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பேரவிலயிலிருந்து கம்பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே, உடஹேந்தன்ன சேனாதீர தேசிய பாடசாலைக்கு முன்னால் வைத்து மாணவிமீது மோதியுள்ளது. படுகாயமடைந்த தரம் ஐந்தில் கல்வி பயிலும் ஹன்சமாளி என்ற 10 வயது மாணவியொருவரே, குருந்துவந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அன்று காலை பஸ்ஸில் இருந்து இறங்கி, பாசாலைக்கு செல்லும்வழயிலேயே பஸ் மோதியுள்ளது. மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கருந்துவந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Read More »பஸ் மோதி வயோதிப பெண் பலி
கம்பளை, எக்கால நகரில் இன்று மதியம் பஸ்மோதி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நகரில் இருந்து உலப்பனைவரை பாடசாலை மாணவர்களை ஏற்றி செல்லும் பஸ் மோதியே 70 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார். சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் எக்கால பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Read More »