இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை -நாமல்

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாத்திரம் செயற்பட்டால் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் மிகுதியாகும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹரக பகுதியில் சனிக்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொணடு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்தோம்.பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வகிக்கிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் …

Read More »

யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது

யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 73 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ்  தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 23 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்   தெரிவித்தனர்.

Read More »

வட்டுக்கோட்டை வாள்வெட்டு – ஒருவர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர், யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிய கணவன் மற்றும் மனைவியை பொன்னாலை …

Read More »

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய ராசிப்பலன் – 13.03.2024 இலங்கை செய்திகள் 13/03/2024

Read More »

இலங்கை செய்திகள் 11/03/2024

இலங்கை செய்திகள் 11/03/2024

இலங்கை செய்திகள் 11/03/2024 இன்றைய ராசிப்பலன் – 11.03.2024 திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு

Read More »

காலநிலை குறித்த அறிவிப்பு!

காலநிலை குறித்த அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மத்திய வங்கி சேவையாளர்களின் வேதன …

Read More »

மத்திய வங்கி சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வாத பிரதிவாதம்!

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன, மத்திய வங்கி சேவையாளர்களது வேதனம் மற்றும் அதிகரித்த வேதன சதவீதம் என்பவற்றை நாடாளுமன்றில் முன்வைத்ததை அடுத்து வாத பிரதிவாதங்கள் வலுப்பெற்றன. மத்திய வங்கியின் சேவையாளர்களது வேதனம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் நிதி குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். மத்திய வங்கியின் பணியாளர் …

Read More »