Monday , 13 October 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்டம் – மண்முனை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள். இலங்கை தமிழரசுக் கட்சி – 7,400 வாக்குகள் – 10 ஆசனங்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 2,630 வாக்குகள் – 3 ஆசனங்கள். தேசிய மக்கள் சக்தி – 2,497 வாக்குகள் – 3 ஆசனங்கள். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,217 வாக்குகள் – 1 ஆசனம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,002 வாக்குகள் – 1 …

Read More »

வடகிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெறும் – சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு களுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலையில் இன்று (6) தனது வாக்கினை பதிவுசெய்தார். இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது செல்வாக்கினை தமிழ் அரசு கட்சி காட்டியது. இந்த தேர்தலில் வடகிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெறும் என்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இன்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் ஏனைய அரசியல்வாதிகளும் பொதுமக்களும் …

Read More »

வாக்களிப்பு வீதம் குறைந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் போன்று வாக்களிப்பு வீதம் பதிவாகாவிட்டாலும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம். எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் கிராமங்களின் அபிவிருத்திகளை அதிகரிப்பதற்கான பலத்தை நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வழங்குவர் என்ற நம்பிக்கை இருக்கிறது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (6) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தின் …

Read More »

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நிறைவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டது. 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலில் வாக்களிக்க 17,156,338 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதன்படி, பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 45 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக, தேர்தல் அதிகாரி துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

Read More »

வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

வங்கி விடுமுறை தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை இலங்கை வங்கி சேவை சங்கம் வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் காரணத்தால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு இரண்டரை மணி நேரம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. …

Read More »

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More »

உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்த ஜனாதிபதி

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

Read More »

கட்டுநாயக்க பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சீதுவ விஜயகுமாரதுங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மதியம் 12 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் மதியம் 12 மணிவரையிலான நிலவரப்படி , அனுராதபுரம் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் , பொலன்னறுவை மாவட்டத்தில் 34 சதவீத வாக்குகளும், திருக்கோணமலை மாவட்டத்தில் 36 சதவீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளன. அத்துடன், பதுளை மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 28 சதவீத வாக்குகளும், காலி மாவட்டத்தில் 35 சதவீத வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் …

Read More »