Monday , 13 October 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

விஜித் குணசேகரவுக்கு விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று(9) முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று முன்னிலையாகியிருந்தார். சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் …

Read More »

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முறைகேடு

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (10) முறைப்பாடு செய்யவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள 2 பரீட்சை நிலையங்களிலும், ஹசலக்க பிரதேசத்தில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்திலும் இந்த முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன. நேற்றைய தினம் (09) வழங்கப்பட்ட ஆங்கில வினாத்தாளை சில மாணவர்கள் தமது கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்து மற்றுமொரு தரப்பினருக்கு அனுப்பி அதற்குரிய விடைகளைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். …

Read More »

பொதுஜன பெரமுன பிரிந்து செல்லத் தயார் – பசில்

நாட்டின் நலனுக்காக எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு தரப்பினருடன் இணையவும், பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அதன் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் கட்சியின் தேர்தல் அலுவலகத்தை இன்று (10) திறந்து வைத்ததன் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று (10 ) மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற 6ஆவது சந்திப்பு இதுவாகும். குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் …

Read More »

டயனா கமகேவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (09) உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த உத்தரவின் பிரதியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கும், தேசிய புலனாய்வு பிரிவுக்கும் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதவான் திலின கமகே அறிவுறுத்தியுள்ளார். டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் …

Read More »

நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகியுள்ள அந்த பதவிக்கு முஜிபுர் ரஹ்மானை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் நேற்று ( 08 ) அறிவித்தது. இந்நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதன்படி, முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More »

பருத்தித்துறையில் வாள் வெட்டு

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக்கட்டுடன் கையை இழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே மணிக்கட்டுடன் ஒரு கையை இழந்துள்ளார். புலோலி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More »

கோப் குழுவிலிருந்து விலகினார் எரான் விக்ரமரத்ன!

கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சபாநாயகரிடம் தாம் ராஜினாமா கடிதத்தை கையளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

பஸ் மோதியதில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

வவுனியா பூவரசங்குளத்தில் இன்று(18) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ், தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதில் ஏறுவதற்கு முயன்ற 76 வயதான ஒருவரை மற்றுமொரு பஸ் மோதியுள்ளது. சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More »

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை -நாமல்

தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்துவதில்லை.சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மாத்திரம் செயற்பட்டால் சமூக கட்டமைப்பில் முரண்பாடுகள் மிகுதியாகும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மஹரக பகுதியில் சனிக்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொணடு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தெரிவு செய்தோம்.பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வகிக்கிறார்கள். பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அரசாங்கம் …

Read More »

யுக்திய நடவடிக்கையில் 926 சந்தேக நபர்கள் கைது

யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலயத்திற்குள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 926  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 73 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ்  தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 23 சந்தேக நபர்கள் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்   தெரிவித்தனர்.

Read More »