Monday , 13 October 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (2) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 974,398 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,380 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 275,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் …

Read More »

இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?(30-04-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (30-04-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 994,670.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 35,090.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 280,700.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 32,170.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 257,350.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …

Read More »

தென்னிந்திய சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் இலங்கை ரெப் பாடகர்

இலங்கையைச் சேர்ந்த ரெப் பாடகர் வாகீஷன் தனது பாடல்களின் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்தவர். இவர் பாடிய ரெப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், ரெப் பாடகர் வாகீஷன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாகீஷன் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி, நடிகர் சார்லி , மற்றும் செண்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கான பூஜை நிறைவடைந்துள்ள நிலையில், …

Read More »

புதிய பொய்களுடன் மக்களை சந்திக்கிறது NPP அரசாங்கம் – சஜித்

கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் போலி வாக்குறுதிகளை வழங்கிய தேசிய மக்கள் சக்தி தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய பொய்களுடன் மக்களை சந்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். நாட்டில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு யுகம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையினூடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை …

Read More »

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக வாகனத்தை மீள கையளிக்க காலக்கெடு !

முன்னாள் ஜனாதிபதிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ள 2 வாகனங்களுக்கும் மேலதிகமான அரசாங்க வாகனங்களை மீள கையளிப்பதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஜனாதிபதி செயலகத்தால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தலா 3 வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தன. எனினும், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் 2 அரசாங்க வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து, மீதமுள்ள வாகனத்தை திருப்பித் தருமாறு ஜனாதிபதி செயலகம் மூலம் எழுத்துப்பூர்வ கோரிக்கையொன்றை விடுத்திருந்தது. அதன்படி, இதுவரை ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை ஒப்படைக்காதவர்களுக்கு சலுகைக் காலம் வழங்க ஜனாதிபதி செயலகம் …

Read More »

முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி அநுர !

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேருவளையில் நேற்றுமுன்தினம் (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உத்தியோகபூர்வ வாகன இறக்குமதி தடையின்போது, இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை முன்னாள் அமைச்சர்கள் மூவர், தவறாகப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக மூன்று முன்னாள் அமைச்சர்களும் சட்ட நடவடிக்கையை …

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 4 நாட்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கமைய கடந்த 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முதற்கட்டமாக அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றது. அத்துடன், நேற்று (28) மூன்றாவது நாளாக வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இறுதியாக இன்றைய தினம் அஞ்சல்மூல வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அஞ்சல்மூல வாக்களிப்புக்காக …

Read More »

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Read More »

ஜனாதிபதி மீதான நம்பிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது – இரா. சாணக்கியன்

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து சற்று முன்னர் வெளியேறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

Read More »