Monday , 13 October 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

“3 பாடங்களில் 9,457 மாணவர்கள் ‘A’ சித்தி”

இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார். மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார். பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி …

Read More »

எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்- பிரதமர் ஹரிணி அமரசூரிய

கடந்த காலங்களில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது முறையாக நடைபெறவில்லை என்றும், எதிர்காலத்தில் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து, திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து, தேவையான திறமையான உத்தியோகத்தர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அரசாங்கம் செயற்படுகிறது. அந்தத் திட்டங்களை கிராமத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்தத் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அரசியலின் உயர் மட்டங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது போல, கீழ் மட்டமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். எங்கள் …

Read More »

யாழ் பல்கலைகழக மாணவன் மரணம் காதலால் வந்த வினை

யாழ்

யாழ் பல்கலைகழக மாணவன் மரணம் காதலால் வந்த வினை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் கொட்டகல – பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கொக்குவில் – பிரவுண் வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்துள்ளார். அந்த இளைஞன் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் குறித்த மாணவனுக்கும் காதலிக்கும் இடையில் …

Read More »

யாழில் 13 வயதிலிருந்து சிறுமியை சீரழித்த கயவர்கள்!

யாழில்

யாழில் 13 வயதிலிருந்து சிறுமியை சீரழித்த கயவர்கள்! யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் சிறுமியொருவரை 3 வருடங்களாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமி, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டதை தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. சுழிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. சிறுமி தனது 13 வயதிலிருந்து வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு குழுவினரால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாயாருக்கு தெரியாது. தற்போது சிறுமிக்கு 15 வயது. அவர் தாயாரின் பராமரிப்பில் வளர்கிறார். சிறுமி …

Read More »

அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை !

அனுர குமார திஸாநாயக

அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை ! அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்தி குறிப்பிட்டார். ஜானாதிபதி அனுர குமார திஸாநாயக ஜனாதிபதி மாளிகையில் தங்குவதில்லை என கூறிய அவர் முன்னரை போல் இன்று பெலவத்த கட்சி காரியாளயத்தில் ஒரு சிறிய அறையில் தங்குவாக குறிப்பிட்டார். அனுர குமார திஸாநாயக போன்ற ஒரு ஜனாதிபதி உலகத்தில் எங்கேயும் இல்லை எனவும் அவர் கூறினார். பழைய …

Read More »

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி) 330 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 259 முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 71 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் 28 வேட்பாளர்களும் 111 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் …

Read More »

மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி கிடையாது – ஜனாதிபதி அனுர

எவ்வளவு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள். தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரை விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு …

Read More »

வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் விசேட தினம் நாளை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக நாளை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமக்குரிய அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று, ஆளடையாளத்தை உறுதிப்படுத்திப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read More »

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

Read More »

உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரம்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியானது. இதன்படி, குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சதிதி நிம்ஹாரா, 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அமாஷா துலாரி பெரேரா, 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் வணிகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். மேலும் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த …

Read More »