Thursday , 3 July 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் துன்பத்தை அரசியல் லாபமீட்ட அரசாங்கம் பயன்படுத்துகிறது – நாமல்

நாமல்

உள்ளுராட்சி தேர்தலிற்கு முன்பாக அரசியல் இலாபமீட்டுவதற்காக அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் தேசிய துன்பியல் நிகழ்வை உணர்ச்சிபூர்வமான பதில்களை தூண்டவும், பொதுமக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் கையாள்கின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப 2021 பெப்பிரவரி 23ம் திகதி நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற …

Read More »

பிள்ளையானுக்காக நாமல் கவலையடையும் காரணம் காலப்போக்கில் வெளிவரும் – நளிந்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைக் குழு உரிய முறையில் விசாரணைகளை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை மாத்திரம் தங்களது தரப்பு வழங்குவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விசாரணைகளை தொடர்ந்து சட்டமா அதிபரால் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் …

Read More »

வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (21) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 16.96 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,599.61 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது

Read More »

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (21) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Read More »

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அமைதி, இரக்கம், மனிதநேயம் மீதான பாப்பரசரின் அர்ப்பணிப்பு உலகில் ஒரு அசைக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் சார்பாக தமது இரங்கலைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

தேசபந்து தென்னகோனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றினால் கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன்போது, அவரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, தேசபந்து தென்னகோன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும்போது அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். …

Read More »

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் அறிக்கை சிஐடியிடம்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைவாக குறித்த அறிக்கை இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரினால் குறித்த அறிக்கை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Read More »

பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து நவீன இயந்திரத் துப்பாக்கிகள் மீட்பு

பிள்ளையானின் அலுவலகத்தில் இருந்து இரண்டு நவீன இயந்திரத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள பிள்ளையானின் அலுவலகத்தில் வைத்து பிள்ளையானைக் கைதுசெய்தபோது, அந்த அலுவலகத்தில் இரண்டு Colt MK18 1 M203 நவீன இயந்திரத் துப்பாகிகள் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகின்றது. Colt MK18 1 M203 என்ற இயந்திரத் துப்பாக்கிகள் இலங்கையில் விசேட அதிரடிப் படையில் கூட ஒரு சில வீரர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்ற துப்பாக்கிகள். விலையுயரந்த அமெரிக்கத் …

Read More »

யாழில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயது இளைஞன் – உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் கொடிகாமம் – வரணி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த 23 வயதுடைய இளைஞன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பொலிஸாரும் அவரின் மரணத்தில் தொடர்பு இருப்பதாகவும் அந்த இளைஞனின் பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த வியாழக்கிழமை எனது மகன் குளித்துவிட்டு வந்தவேளை 3.00 மணிக்கு பின்னர் எனது மகனை அவரது நண்பர் அழைத்துச் சென்றார். அவருடன் சென்றுகொண்டிருந்தபோது இன்னொரு நண்பர் குளிக்க வருமாறு தொலைபேசியில் கூறியவேளை எனது மகன் அவரிடம் சென்றுள்ளார். இதன்போது கொடிகாமம் …

Read More »

உத்தரவாதம்

உத்தரவாதம்

நீங்கள் வாக்குறுதி தந்த பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவீர்களானால் பல புலம்பெயர் தமிழர்கள் கோடிக்கணக்கான ரூபாக்களை இலங்கையில் முதலீடு செய்வார்கள். நீங்கள் முப்படைகளின் தளபதியாக இருப்பினும், முப்படைகளும் பூரண உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்களா என்றால் இல்லை… பாதிப்படைகள் முன்னாள் ஆட்சியாளரின் கட்டுப்பாட்டிலும், மிகுதிப் படைகள் பன்னாட்டு உளவுத்துறைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறார்கள். எனவே ஒரு கையால் அவர்களை வரவழைத்து மறு கையால் அவர்களை புலிகளோடு தொடர்புபடுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ளே தூக்கிப்போட்டு அவர்களது முதலீடுகள்/சொத்துக்கள் கொள்ளையடிக்க கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு. இது தவிர …

Read More »