கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை விசேட அதிரடிப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் நேற்று (7) இரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட அழகாபுரி பகுதியில் விடுதலைப்புலிகளால் அன்பு முகாம் அமைக்கப்பட்டிருந்த பகுதியில் ஸ்கானர் மூலம் புதையல் தேட முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2 இலத்திரனியல் ஸ்கானர் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக …
Read More »1700 ரூபாய் சம்பளத்தை இந்த மாதம் வழங்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் தெரிவிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக சுற்று நிருபங்கள் தங்களுக்கு கிடைக்காத காரணத்தினால், அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 1700 ரூபாய் சம்பளத்தை இந்த மாதம் வழங்க முடியாது என தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.
Read More »நாளை கொழும்பு கண்டி பிரதான தற்காலிகமாக மூடப்படும் வீதி
நாளை காலை 10:30 முதல் மாலை 6:30 வரை கொழும்பு கண்டி பிரதான வீதியின் கடுக்கண்ணாவ பகுதி தற்காலிகமாக மூடப்படும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கற்பாறையில் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால் அதனை அகற்றுவதற்கும், முறிந்து விடும் அபாயத்தில் இருக்கும் பாரிய மரங்களை அகற்றுவதற்குமே குறித்த வீதி மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் பெண் படுகொலை
குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக தகவ்லல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »உளூராட்சி சபை தேர்தல் மீதான வழக்கு ஒத்திவைப்பு
உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு அறிவிப்வை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைத்தே இந்த உத்தரவிட்டுள்ளது.
Read More »சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய நபர் கைது!
மணலாறு பகுதியில் சிறுவன் ஒருவர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் காணொளியுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் உணவு உட்கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவரை நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த நிலையில் குறித்த சிறுவன் மீது தாக்குதல் நடத்திய ஆண் உட்பட மூன்று பேர் புல்மோட்டை – அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மணலாறு காவல்துறையினர் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் மற்றும் முல்லைத்தீவு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த …
Read More »பொசன் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு!
எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம் மற்றும் மிஹிந்தலை ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் குறித்த காலப்பகுதியில் அனைத்து மதுபானசாலைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படும்.
Read More »வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு.
அதிக மழையினால் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தவலம பகுதியைச் சேர்ந்த இருவரில் 23 வயதான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர். மற்றுமொருவரை தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
Read More »பொடி மெனிகே ரயிலின் எஞ்சின் தீப்பிடித்தது
பொடி மெனிகே ரயிலின் எஞ்சின் தீப்பிடித்தது கொழும்பு, கோட்டை நிலையத்தில் இருந்து பதுளையை நோக்கி பயணித்த பொடிமெனிக்கே ரயிலின் எஞ்சின், ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் வைத்து தீப்பிடித்தது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையினை, ரயில்வே திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு! நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »