உலக செய்திகள்

உலக செய்திகள்

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொல்ல சதி திட்டம்

புதிய ஜனாதிபதி

புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கொல்ல சதி திட்டம் அமெரிக்கா: புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை கொல்ல முயற்சி செய்யப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தடுக்க எப்.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானின் அதிகாரிகளும் இத்திட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .

Read More »

எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று 2-வது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார். ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் கூறியதாவது:- அமெரிக்காவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. குடியரசு கட்சி வெற்றிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு நன்றி. இக்கட்டான சூழலில் எனக்கு துணையாக இருந்த குடும்பத்தினருக்கு நன்றி. இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது. 47-வது …

Read More »

டிரம்ப்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை’ – மிச்சேல் ஒபாமா

மிச்சேல் ஒபாமா

டிரம்ப்பின் மோசமான குணத்தை யாரும் கண்டுகொள்வதில்லை’ – மிச்சேல் ஒபாமா மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கமலா ஹாரிசை ஆதரித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை மிச்சேல் ஒபாமா முன்வைத்தார். தனது பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது;- “இந்த தேர்தலில் டிரம்ப்புக்கு ஏன் இன்னும் கணிசமான அளவில் ஆதரவு கிடைக்கிறது என்பது எனக்கு புரியவில்லை. வேட்பாளர்கள் அனைத்து தகுதிகளையும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவதற்கு வாக்காளர்களுக்கு அனைத்து …

Read More »

ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி ரஷியாவின் கிரோவ் மாகாணத்தில் இருந்து எம்.ஐ-2 என்ற ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. இதில் டாக்டர்கள் உள்பட 4 பேர் பயணித்தனர். பெலீங்கி என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதில் இருந்த 4 பேரும் உடல் சிதறி பலியாகினர். இந்த விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து …

Read More »

பிலிப்பைன்சில் கனமழை – 81 பேர் பலி

பிலிப்பைன்சில் கனமழை - 81 பேர் பலி

பிலிப்பைன்சில் கனமழை – 81 பேர் பலி பிலிப்பைன்சில் உருவான டிராமி புயல் அந்நாட்டின் பல மாகாணங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக அந்நாட்டின் இசபெலா, இபுகாவோ, படாகஸ் உள்பட பல்வேறு மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் காரணமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கனமழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், பிலிப்பைன்சில் வீசிய புயலால் பெய்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 81 பேர் …

Read More »

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் கடந்த ஏப்ரல் 13ம் தேதி மற்றும் அக்டோபர் 2ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த 2 தாக்குதல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது இஸ்ரேல் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஈரான் …

Read More »

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! | Israel launches air strikes on Iran

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

Read More »

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!

ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்! ஒக்டோபர் 7ஆம் திகதி ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் நோக்கில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நேரடி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது! ஈரானின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது. மலையகத் தமிழர்களுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆலோசனை – விஜித ஹேரத்

Read More »

இலங்கையர் ஒருவர் கனடாவில் சுட்டுக் கொலை!

கனடாவில் பணிபுரிந்து வந்த யாழ்ப்பாணம் – மயிலிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் இணந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபர் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Read More »

இஸ்ரேலிய பிரதமரின் இல்லத்தின் மீது தாக்குதல்!

லெபனானிலிருந்து இன்று காலை இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தினால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான இல்லம் தாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய வடக்கு கரையோர நகரமான செசேரியாவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த தாக்குதலின்போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ, அவரது குடும்பத்தினரோ அங்கு இருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

Read More »