ஈரோட்டில் பணம் கொடுக்காமல் வாக்கு பெற முடியுமா..? சீமான் கேள்வி நாம் தமிழர் கட்சியினர் எனக் கூறிக் கொண்டு சொந்த கட்சியினரையே மீண்டும் தி.மு.கவில் இணைத்து வருவதாகவும், பணம் கொடுக்காமல் அவர்களால் ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு பெற முடியுமா என சீமான் கேள்வி எழுப்பினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து சூரம்பட்டி தெருமுனைக் கூட்டத்தில் பேசிய சீமான் இவ்வாறு கூறினார். பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்!
Read More »தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் பெட்டியில் சோதனை
தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் பெட்டியில் சோதனை சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் ஆட்கள் இருப்பது போன்று சத்தம் கேட்பதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்ததால் ரயில்வே போலீசார் தாம்பரத்தில் சோதனை மேற்கொண்டனர். சரக்கு பெட்டியின் சாவி இல்லாததால் கதவை உடைத்து ஆட்கள் பதுங்கி இருக்கிறார்களா என சோதித்தனர். சரக்குப்பெட்டியில் யாரும் இல்லை என்பதை உறுதிசெய்தபின் ரயில் புறப்பட்டுச் சென்றது. பிலடெல்பியா நகரில் குடியிருப்புக் கட்டடங்கள் மீது மோதி விமானம் விபத்து
Read More »பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய்
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய் பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை உளமார வரவேற்பதாக கூறியுள்ளார்.
Read More »புதிய தொலைக்காட்சி சேனல் தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டம்?
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் தனது கட்சி சார்ந்த செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.இதுதொடர்பாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. ஆனால், தொலைக்காட்சி சேனல் தொடங்குவது என்பது பெரிய விஷயம். இப்போதைக்கு ‘தமிழ் ஒளி’ என்று தனது சேனலுக்கு தலைப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே பெயரில் சேனல் உருவாகுமா …
Read More »ரஜினி வராததால் விஜய்யை வைத்து பாஜக கட்சி தொடங்கியுள்ளது: அப்பாவு
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரோடு நானும் வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன். ஏற்கனவே பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன். திமுக பணம் சம்பாதிப்பதாக விஜய் சொல்லி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும்போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும்போது தான் உண்மையாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக …
Read More »திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி
திமுகவை அட்டாக் செய்த விஜய்… ஆர்.எஸ்.பாரதி தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:- “திமுக ஒரு ஆலமரம். காய்த்த மரம்தான் கல்லடி படும்; யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது. வார்த்தைக்கு.. வார்த்தை பதில் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதேபோல் யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவை தான் விமர்சிப்பார்கள். விமர்சனங்களை எதிர்கொள்வோம் தக்க பதிலடி கொடுப்போம்” என்று கூறினார் விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா
Read More »விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா
விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை – எச்.ராஜா தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் உரையாற்றினார். கட்சியின் கொள்கைகளும் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், விஜய்க்கு கொள்கை ரீதியான தெளிவு இல்லை என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். …
Read More »ஆரம்பமானது விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி முதல் மாநாட்டை அறிவித்தார். தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. கட்சியின் முதல் மாநாடு என்பதால் விஜய் என்ன பேச உள்ளார், கட்சியின் எதிர்கால கொள்கைகள் என்ன, திட்டங்கள், எதிர்கால அரசியல் பயணம், அவர் எந்த மாதிரியான அரசியலை முன்னெடுக்கப் போகிறார் என்பதை அறியவும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், இரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். …
Read More »மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட விஜய்
மாநாட்டு பணிகளை நேரில் பார்வையிட்ட விஜய் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக்கழக மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கட்சியின் தலைவர் விஜய் இன்று மதியம் சென்னையில் இருந்து மாநாட்டு திடலுக்கு வருகை தருவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் திடீரென விஜய் நேற்று மாலை 6 மணிக்கு மாநாட்டு திடலுக்கு காரில் வருகை தந்தார். தொடர்ந்து, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கேரவனில் அவர் தங்கி சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர், இரவு 9 மணியளவில் மாநாட்டு திடலுக்கு வந்த …
Read More »கச்சத்தீவை மீட்போம் – அண்ணாமலை சூளுரை
“கச்சத்தீவை மீட்டால் மட்டுமே தமிழக மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை வார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்வினையாற்றியுள்ள தி.மு.க., 10 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் …
Read More »