செய்திகள்

செய்திகள்

விமான சேவையை நிறுத்துவதாக ஏர்-பிரான்ஸ் அறிவிப்பு

ஏர்-பிரான்ஸ்

சென்னை – பாரிஸ் நேரடி விமான சேவையை மார்ச் மாதத்துடன் நிறுத்தப்போவதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பேரிடருக்கு பின், கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னைக்கு நேரடி விமான சேவையை ஏர் பிரான்ஸ் தொடங்கியது. தங்களது விமான சேவைகளை மேம்படுத்துவதற்காக, இந்த மார்ச்சுடன் சென்னைக்கான நேரடி விமான சேவையை நிறுத்தப்போவதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி

Read More »

பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெரித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அம்மாநில திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி …

Read More »

உடனே அரசாணை வெளியிடனும் – சீமான்

சீமான்

மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் கடைக்கு லீவு துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கிறித்துவப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் …

Read More »

காலநிலை குறித்த அறிவிப்பு!

காலநிலை குறித்த அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மத்திய வங்கி சேவையாளர்களின் வேதன …

Read More »

மத்திய வங்கி சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வாத பிரதிவாதம்!

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன, மத்திய வங்கி சேவையாளர்களது வேதனம் மற்றும் அதிகரித்த வேதன சதவீதம் என்பவற்றை நாடாளுமன்றில் முன்வைத்ததை அடுத்து வாத பிரதிவாதங்கள் வலுப்பெற்றன. மத்திய வங்கியின் சேவையாளர்களது வேதனம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் நிதி குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். மத்திய வங்கியின் பணியாளர் …

Read More »

திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: சீமான்

சீமான்

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி சென்னை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக ஏன் தமிழை வழக்காடு மொழியாக மாற்றவில்லை என கேள்வி எழுப்பினார். இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்

Read More »

இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போதிலும் சிங்களத் தலைமைகள் அவர்களை இனவாதத்தை நோக்கி திசை திருப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழர்களுக்கு இலங்கையினுள் தீர்வு கிடைக்காது என்பதாலேயே தொடர்ந்தும் சர்வதேசம் தலையிட வேண்டுமென கோரிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகியுள்ள ஏனைய 3 இலங்கையர்களுக்கேனும் நாடு திரும்புவதற்கு இலங்கையும் …

Read More »

நாட்டில் குழப்பமும், இருளும் சூழும் – ஜோ பைடன்

ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டில் குழப்பமும் இருளும் சூழ்வதுடன், மக்களிடையே பிளவு ஏற்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். தனது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு, பணவீக்கம், மருந்துகள் விலை, துப்பாக்கிக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் நாடு மேம்பாடு அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குத் தடை ஏற்படும், டிரம்புக்கு மனக்குறையும் மனக்கசப்பும் உள்ளதால், பதவியேற்ற பிறகு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் பைடன் தெரிவித்துள்ளார். …

Read More »

மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் நிறையை குறைப்பதற்கு பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ள தரமான பாடசாலை பையின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. புத்தகங்கள் அடங்கிய அதிக நிறையுடைய பாடசாலை பைகளை சுமப்பதினால் மாணவர்கள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் எமது செய்தி சேவை வெளிப்படுத்தியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அந்த சங்கத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்படவுள்ள வைத்தியர் கபில …

Read More »