இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவா முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்ட? தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகள் …
Read More »பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை: ஜேர்மன் மாகாணங்கள் பல திட்டம்
உலக நாடுகள் சில பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதித்துவரும் நிலையில், ஜேர்மன் மாகாணங்கள் பல, பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க திட்டமிட்டுவருகின்றன. உண்மையில், மாகாண அரசுகள் பள்ளிகளில் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க தயக்கம் காட்டி வரும் நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி துவங்கும்போது பள்ளிகளில், சில விதிவிலக்குகளுடன் ஸ்மார்ட்போனுக்கு தடை விதிக்க Hesse மாகாணம் முடிவு செய்துள்ளது. ஆசிரியர்கள் பலர் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். பிள்ளைகள் டெஸ்குக்குக் கீழே மொபைலை வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதே ஒரு கவலையாகிவிட்டது என்கிறார்கள் சில …
Read More »வடகிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெறும் – சாணக்கியன்
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு களுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலையில் இன்று (6) தனது வாக்கினை பதிவுசெய்தார். இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது செல்வாக்கினை தமிழ் அரசு கட்சி காட்டியது. இந்த தேர்தலில் வடகிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெறும் என்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இன்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் ஏனைய அரசியல்வாதிகளும் பொதுமக்களும் …
Read More »வாக்களிப்பு வீதம் குறைந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் போன்று வாக்களிப்பு வீதம் பதிவாகாவிட்டாலும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம். எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் கிராமங்களின் அபிவிருத்திகளை அதிகரிப்பதற்கான பலத்தை நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வழங்குவர் என்ற நம்பிக்கை இருக்கிறது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (6) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தின் …
Read More »2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் நிறைவு
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் தேர்தல் நடத்தப்பட்டது. 49 அரசியல் கட்சிகள் மற்றும் 257 சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த 75,589 வேட்பாளர்கள் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். இத்தேர்தலில் வாக்களிக்க 17,156,338 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதன்படி, பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 45 சதவீதத்தைத் தாண்டியுள்ளதாக, தேர்தல் அதிகாரி துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.
Read More »உலக வங்கியின் தலைவர் இலங்கை விஜயம்
உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அஜே பங்கா நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலக வங்கியின் தலைவர் இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 20 ஆண்டுகளின் பின்னர் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என …
Read More »வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
வங்கி விடுமுறை தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை இலங்கை வங்கி சேவை சங்கம் வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடைபெறும் காரணத்தால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டு இரண்டரை மணி நேரம் திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. …
Read More »எலான் மஸ்க்கை விட அதிக சம்பளம் வாங்கும் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி…
பொதுவாக உலகின் மிகப் பெரிய பணக்காரர்களைப் பற்றி மக்கள் பேசும்போது, எலான் மஸ்க், பில் கேட்ஸ் மற்றும் ஜெஃப் பெசோஸ் போன்ற பெயர்களை வழக்கமாக குறிப்பிடுவோம். ஆனால், இந்த வருடம் அவர்களை விட அதிகமாக சம்பாதித்த ஒருவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான லாரிபிளாக்ராக் உலகின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாகும், இது டிரில்லியன் கணக்கான டொலர் முதலீடுகளைக் கையாளுகிறது. 1988ல் நிறுவப்பட்ட BlackRock நிறுவனத்தின் குறிக்கோள், எதிர்காலம் கருதி தங்கள் பணத்தை வளர்க்க …
Read More »நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More »உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்த ஜனாதிபதி
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
Read More »